இன்றைய மொபைல் உலகம்
மொபைல் உலகம். ஆன்லைன் உலகம் : *மொபைலே உலகம்*
*உலகமே மொபைல்*
*எனும் வாழும் அனைத்து உள்ளங்களுக்கும் சமர்ப்பணம். அப்போதும் சாதாரணமாக தகவல் தொடர்புக்கு தபால்அட்டையில் இருந்து தந்தி வரை இருந்துருக்கு. என்னன்னா, விசயம் தெரிய சில மணி நேரங்களில் இருந்து சில நாட்கள் வரை எடுக்கும்.
அதன்பின் தொலைபேசி வந்தபோதும், அதிக உபயோகத்தில் இருந்த போதும் நமது ஞாபக சக்தியை அதிகப்படுத்த அது மிகவும் உதவியிருக்குதுனே சொல்லலாம். அநேகம் பேருக்கு ஒரு ஐம்பது தொலைப்பேசி எண்களாவது மனப்பாடமாக இருக்கும். அதுபோல பல எஸ்டீடீ ஐஎஸ்டி கோட் நமபர்களும். இப்போது எதையும் ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டியதில்லை.
கைப்பேசி கண்டுபிடிக்கப்படாமல் இருந்தால் அதற்கான மாற்றை மனிதன் தேடியிருக்கலாம். அல்லது அப்படியே வாழ பழகியிருக்கலாம்.
பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை இருந்த கைப்பேசி இல்லாத உலகமும் நன்றாகத்தான் இருந்தது. இப்போது கைப்பேசியினால் பல வேலைகள் எளிதாகிறதுதான். கைப்பேசி என்பது வெறும் கைப்பேசியாக இல்லாமல் பல பொருட்களுக்கு மாற்றாகி உள்ளது.
வாழ்த்துஅட்டை முதல் கேமரா, கால்குலேட்டர், அலாரம், ஆல்பம் என பலவற்றின் மறுஅவதாரமாக உள்ளது.
மே மாதம்னு ஒரு படத்துல கதாநாயகியோட பணக்கார அப்பா , நாயகிக்கு தகவல் சொல்லணும்னா டிரைவர்கிட்ட ஒரு டேப் ரெக்கார்டரயும் ஒரு கேசட்டையும் குடுத்து அனுப்புவார். அவங்க தகவலை கேட்டுட்டு பதிலுக்கு ஒரு தகவலை ரிக்கார்ட் பண்ணி அனுப்புவாங்க போல. இப்ப பாக்குறப்போ இந்த சீன் கொஞ்சம் காமெடியாதான் தெரியுது. அப்போ அதுவும் ஒரு தகவல் பரிமாற்ற டெக்னாலஜி போல.
அதேபோல ஏக்துஜேகேலியே படத்துல எதிர் வீட்டிலிருக்கும் காதலிக்கு இரவு வணக்கம் சொல்ல விளக்கைஅணைத்து அணைத்து எரியவிடுவார் நாயகன். காதலி எதிர்வீட்டில் இருந்தால் பரவாயில்லை. தூரத்தில் இருந்தால் எனன செய்ய?
இதுபோல பழைய படங்களில் கைப்பேசி இல்லாத காலத்தில் தகவல் தொடர்பு எவ்வாறு கையாளப்பட்டது என விளங்கும்.
கைப்பேசி இல்லாத உலகம் எப்படி இருக்கும்?
கைப்பேசி இல்லாத உலகம்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. கைப்பேசி தொலைந்தால்தான் கை உடைந்தது போல இருக்கிறது. கைப்பேசி உபயோகிக்கும் நேரத்தை குறைப்பது எப்படி? உங்கள் நண்பர்கள், குடும்பத்தார், சுற்றத்தாருடன் உங்கள் நேரத்தை செலவிடுங்கள்.. இதற்கான பதிலை அவர்களிடம் தேடுங்கள்.புத்தகங்களை நண்பர்களாக்கி கொள்ளுங்கள்.புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள்.இரவில் நட்சத்திரங்களுடன் உரையாடுங்கள்.இலவச நேரம் கிடைக்காதவாறு உங்களை ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுத்தியவாறிருங்கள்.முதலில் கடினமாக தான் இருக்கும்.அப்புறம் அதுவா பழகிடும்… கைப்பேசி பயன்பாட்டை குறைக்க ஏதேனும் வழி இருந்தால் கூற முடியுமா?
# பயன்பாட்டுச் செயலிகள் ( ஓலா, ஊபர், அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸொமோட்டோ, முகநூல், செய்திகள், முதலானவை) எதுவும் கைப்பேசியில் வைக்காதீர்கள்.
# காலை எழுந்த முதல் ஒரு மணிநேரம்.. வானமே இடிந்தாலும் கைப்பேசியைப் பார்க்கக் கூடாது. வாய்ஸ் அழைப்பு மட்டும் வந்தால் எடுத்துப் பேசலாம். நோ வீடியோ கால், நோ வாட்ஸப் கால், நோ எஸ்எம்எஸ்.
# அலுவலகத்தில் கைப்பேசியை டேபிள் ட்ரா அல்லது உங்கள் கைப்பையில் வைத்துவிட வேண்டும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கைப்பேசியைப் பார்க்கக்கூடாது. வாய்ஸ் கால் வந்தால் மட்டும் எடுத்து பேசலாம்.
# காபி ப்ரேக், லஞ்ச் ப்ரேக்கில் மட்டும் கைப்பேசியை உபயோகிக்கவும்.
# ஆபீசிலிருந்து வீட்டுக்கு வந்த முதல் ஒரு மணிநேரம் வானமே இடிந்தாலும் கைப்பேசியைப் பார்க்கக் கூடாது.
#படுப்பதற்கு அரை மணி முன் வரை மட்டுமே கைப்பேசியை உபயோகிக்கவாம். படுக்கையில் படுத்ததும் கைப்பேசியை தூரத்தில் வைத்து விட வேண்டும்.
முதல் நாலைந்து நாட்கள் கஷ்டமாக இருக்கும். அப்புறம் பழகிவிடும்.
இதுதவிர.. எனக்கு முகநூல், இன்ஸ்டாகிராம், லிங்க்டின், என எந்த ஐடியும் இல்லை. ஆபீஸ் இ-மெயில் கூட எனது கைப்பேசியில் வைத்துக்கொள்ளவில்லை.
வாட்ஸப், க்வோரா மட்டும் தான்.
Comments
Post a Comment