இன்றைய மொபைல் உலகம்
மொபைல் உலகம். ஆன்லைன் உலகம் : *மொபைலே உலகம்* *உலகமே மொபைல்* *எனும் வாழும் அனைத்து உள்ளங்களுக்கும் சமர்ப்பணம். அப்போதும் சாதாரணமாக தகவல் தொடர்புக்கு தபால்அட்டையில் இருந்து தந்தி வரை இருந்துருக்கு. என்னன்னா, விசயம் தெரிய சில மணி நேரங்களில் இருந்து சில நாட்கள் வரை எடுக்கும். அதன்பின் தொலைபேசி வந்தபோதும், அதிக உபயோகத்தில் இருந்த போதும் நமது ஞாபக சக்தியை அதிகப்படுத்த அது மிகவும் உதவியிருக்குதுனே சொல்லலாம். அநேகம் பேருக்கு ஒரு ஐம்பது தொலைப்பேசி எண்களாவது மனப்பாடமாக இருக்கும். அதுபோல பல எஸ்டீடீ ஐஎஸ்டி கோட் நமபர்களும். இப்போது எதையும் ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டியதில்லை. கைப்பேசி கண்டுபிடிக்கப்படாமல் இருந்தால் அதற்கான மாற்றை மனிதன் தேடியிருக்கலாம். அல்லது அப்படியே வாழ பழகியிருக்கலாம். பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை இருந்த கைப்பேசி இல்லாத உலகமும் நன்றாகத்தான் இருந்தது. இப்போது கைப்பேசியினால் பல வேலைகள் எளிதாகிறதுதான்.